வெடிகுண்டு இருந்த மாங்கொட்டையை கடித்த பசுமாடு வாய்கிழிந்து படுகாயம்
வெடிகுண்டு இருந்த மாங்கொட்டையை கடித்த பசுமாடு வாய்கிழிந்து படுகாயம் அடைந்தது.
பேரணாம்பட்டு
வெடிகுண்டு இருந்த மாங்கொட்டையை கடித்த பசுமாடு வாய்கிழிந்து படுகாயம் அடைந்தது.
பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரி குத்தி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி முருகம்மாள் 15 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பசுமாடுகளை அருகிலுள்ள பொகளூர் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். மாலையில் ஒரு பசுமாட்டை தவிர மற்ற அனைத்து மாடுகளும் திரும்பின.
அந்த மாட்டை தேடிச்சென்றபோது வாயின் தாடை கிழிந்த நிலையில் ரத்த காயத்துடன் போராடிக்கொண்டிருந்தது. வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலானது காட்டுப் பன்றிகள் மற்றும் மான்களை மாங்காய் கொட்டையில் நாட்டு வெடியை வைத்து கொன்று வருகின்றனர். வன விலங்குகளுக்கு வைத்திந்த நாட்டு வெடியை மாங்காய் கொட்டையில் இருந்ததை அறியாமல் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு நாட்டு வெடியுடன் உள்ள மாங்கொட்டையை கடித்ததில் வாய் கிழிந்து காயமேற்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மாங்காய்கொட்டையில் நாட்டு வெடியை வைத்தது யார் என்பது குறித்து விசாரணை செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.