பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் வெளியிடங்களுக்கு செல்ல ஊட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நீலகிரி

ஊட்டி,

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் வெளியிடங்களுக்கு செல்ல ஊட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அலைமோதியது

ஊட்டியில் நிலவும் இதமான சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சீசன் முடிந்து சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு தலங்களை கண்டு ரசித்தனர். இந்தநிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து விட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் ஊட்டியில் இருந்து கேரளா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பயணிகள் அவதி

இருப்பினும், போதிய அளவு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக வெகுநேரம் உடமைகளுடன் காத்திருந்தனர். மாலையில் நேரம் செல்ல, செல்ல கூட்டம் மேலும் அதிகரித்தது. பஸ் கிடைக்காததால் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஊட்டியில் இருந்து கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், கூடலூர் சென்ற பஸ்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

மேலும் கோவை, திருப்பூர், சேலம், மதுரை போன்ற வெளியிடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் நின்றபடி பயணித்தனர். பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்தவுடன், பலர் வேகமாக ஓடிச்சென்று இருக்கைகளை பிடித்து அமர்ந்தனர். இதனால் வயதானவர்கள் மற்றும் பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். எனவே, வார விடுமுறையில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story