சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும்
குலமாணிக்கத்தில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர
கூத்தாநல்லூர்:
குலமாணிக்கத்தில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த ரேஷன் கடை
கூத்தாநல்லூர் அருகே உள்ள, குலமாணிக்கம் கிராமத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. அங்கு அரிசி, சர்க்கரை, ஆயில், பருப்பு, உளுந்து, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ெபாதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. மேலும், கட்டிடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு, மழை காலங்களில் தண்ணீர் கசிந்து ரேஷன் பொருட்கள் சேதம் அடைந்தது.
இடமாற்றம்
இதை தொடர்ந்து அந்த ரேஷன் கடை குலமாணிக்கம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைக்கின்றனர். சமுதாய கூடத்தில் போதுமான அளவு பொருட்கள் வைக்க முடியவில்லை. எனவே சேதமடைந்த பழைய ரேஷன் கடையை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.