இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது


இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆமையின் உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்த ஆமையானது சுமார் 100 கிலோ எடை இருந்ததும் சுமார் 3 அடி நீளம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இறந்து கிடந்த ஆமையின் உடலை கடற்கரை அருகே ஆழமாக குழி தோண்டி வனத்துறையினர் புதைத்தனர். ஆழ்கடலில் நீந்தும் போது பாறையில் மோதியோ அல்லது ஏதேனும் மீன்பிடி படகின் அடிப்பகுதியில் அடிபட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story