நாமக்கல்லில் காது கேளாதோர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்லில் காது கேளாதோர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு ஒரு சதவீதம் வேலை வழங்க வேண்டும், தொகுப்பு வீடு வழங்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வழங்கிட சிறப்பு முகாம் நடத்த வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் விசில் ஊதி சத்தத்தை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.