ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 15 Nov 2023 9:01 AM IST (Updated: 15 Nov 2023 10:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story