நாய்கள் துரத்தியதால் கடைக்குள் புகுந்த மான்


நாய்கள் துரத்தியதால் கடைக்குள் புகுந்த  மான்
x

நாய்கள் துரத்தியதால் கடைக்குள் புகுந்த மானை இளைஞர்கள் மீட்டு காட்டில் விட்டனர்..

திருவண்ணாமலை

நாய்கள் துரத்தியதால் கடைக்குள் புகுந்த மானை இளைஞர்கள் மீட்டு காட்டில் விட்டனர்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றி கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மான், மயில் போன்றவை அவ்வபோது வெளியேறி வருகிறது. சில சமயங்களில் நாய்கள் அதனை துரத்தி கடித்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று உணவு மற்றும் தண்ணீர் தேடி காஞ்சி சாலை பகுதி வழியாக வனப்பகுதியில் இருந்த மான் ஒன்று வெளியே வந்து உள்ளது. அந்த மானை நாய்கள் துரத்தியதால் அதனிடம் இருந்து தப்பிக்க அங்கும், இங்கும் ஓடிய மான் வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையில் புகுந்து தஞ்சம் அடைந்தது.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பாதுகாப்புடன் நீண்ட நேரம் போராடி அந்த மானை பிடித்து காட்டில் கொண்டு போய் விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறை மூலம் வனப்பகுதியை சுற்றி கம்பி வேலிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story