முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க அலுவலகம் துணை கலெக்டர் திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க அலுவலகத்தை துணை கலெக்டர் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க அலுவலகத்தை துணை கலெக்டர் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்ட பிறகு திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பாக அலுவலகம் ஒதுக்கி தரக் கோரி கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு பூங்கா பகுதியில் அலுவலகம் ஒதுக்கி தரப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு தலைவர் மேஜர், சி மகேந்திரன், தலைமை வகித்தார், செயலாளர் ஆர் மோகன் குமார், துணைத் தலைவர் எம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கே. அருள் வரவேற்றார்.
திருப்பத்தூர் மாவட்ட துணை கலெக்டர் பி.கே.கோவிந்தன், முப்படை வீரர்கள் நலச்சங்க அலுவலக பெயர் பலகை மற்றும் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் பூஜை செய்தும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை துணை கலெக்டர் படித்தார்.அதில் நாட்டிற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பணிபுரிந்த முப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். நிகழ்ச்சியில் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கே. முனியப்பன் நன்றி கூறினார்.