தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது
கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற இருந்த தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் மகேந்திரன் தலைமையில் நடந்தது. . இதில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அறிவழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாராஜா, ஊராட்சி மன்ற உறுப்பினர் ரியாஜூதீன், கிராம நிர்வாக அலுவலர் குமாரவேலு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த தர்ணா போராட்டம் கைவிடப்பட்டதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
Related Tags :
Next Story