விமான கதவு திறக்காதது குறித்து விசாரணை நடத்த இயக்குனரகம் உத்தரவு


விமான கதவு திறக்காதது குறித்து விசாரணை நடத்த இயக்குனரகம் உத்தரவு
x

திருச்சியில் விமான கதவு திறக்காதது குறித்து விசாரணை நடத்த விமான இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி

திருச்சியில் விமான கதவு திறக்காதது குறித்து விசாரணை நடத்த விமான இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

விமானங்கள்

திருச்சி விமான நிலையத்துக்கு கடந்த 7-ந்தேதி இரவு 10.10 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் 158 பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தது. இதைத்தொடர்ந்து பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

விமான ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. அதன் பின் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின் கதவை திறந்தனர். இதனால் இரவு 10.10 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் பயணிகள் விமானத்தில் சிக்கி தவித்தனர். கதவு திறக்கப்பட்டதும் அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான ஆணைய குழுவினர்

இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய இயக்குனரகம் சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையை விமான நிலைய இயக்குனரகத்தினர் விரைவில் தொடங்க உள்ளனர்.


Related Tags :
Next Story