மரங்களை அகற்றி மறுநடவு செய்த மாவட்ட நிர்வாகம்


மரங்களை அகற்றி மறுநடவு செய்த மாவட்ட நிர்வாகம்
x

மரங்களை அகற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் மறுநடவு செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார். இதற்காக அந்த வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, பந்தல் அமைக்க திட்டமிட்ட பகுதியில் அடர்த்தியாக 10-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கவும், அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலையும் இருந்தது. இதுபற்றி விளையாட்டு வீரர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அந்த மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு செய்து, அங்கு கால்பந்து மைதானம் அமைத்து கொடுக்க ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் தற்போது, மற்ற இடங்களில் விழா பந்தல் அமைத்தால் விளையாட்டு மைதானங்கள் சேதமாகும் என்பதால், அந்த மரங்களை அகற்றி மற்றொரு பகுதியில் மாவட்ட நிர்வாகம் நட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டி வருகிறார்கள். அந்த மரங்கள் ஓரிரு மாதங்களில் துளிர்க்கும் என்று வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story