மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்படும்


மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்படும்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட புதிய கலெக்டர் சாரூஸ்ரீ கூறினார்.

திருவாரூர்

அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட புதிய கலெக்டர் சாரூஸ்ரீ கூறினார்.

கலெக்டர் பொறுப்பேற்பு

திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த காயத்ரி கிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சாரூஸ்ரீ திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்று கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

துரிதமாக செல்படும்

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைகின்ற வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசின் திட்டங்கள் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்படும். திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள், விவசாய தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால் உணவு சார்ந்த தொழிற்சாலை ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தரம் உயர்த்த நடவடிக்கை

திருவாரூர் நகராட்சியை தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்துவது போல் நகர்புறங்களில் அரசு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திடும் திட்டத்தை செயல்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தப்படும்.

மக்களின் குறைகள் உடனுக்கு உடன் அரசின் விதிமுறைக்குட்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இவர் 2014 ஆண்டு இந்திய ஆட்சி பணியில் சேர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் துணை கலெக்டராக பதவியேற்று, பின்பு வணிக வரித்துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து, தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story