மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தொண்டர்கள் மத்தியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்து விட்டார். இந்த அரசங்கத்துக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்துவிடலாம்.
அமைச்சர்கள், அதிகாரிகளை நம்பாமல் குழு அமைத்து அறிக்கை வந்த பிறகே திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றுகிறது. என்றைக்கு குழு அறிக்கை அளிப்பது, என்றைக்கு அரசாங்கம் செயல்படுவது.
எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்பதற்காக ஒரு குழுவை அமைத்து, மக்களை ஏமாற்றுகின்ற அரசாங்கம், தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கம். ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும், திமுகவும் உடன்பாடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.