ஆவணப்பட இயக்குனரை கைது செய்ய வேண்டும்
காளிஅம்மனை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட ஆவணப்பட இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வினர் புகார் கொடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை
பா.ஜ.க. ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டுபிரிவு மாவட்ட தலைவர் கணேசசிவம் மற்றும் பா.ஜ.க.வினர் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை, காளிஅம்மனை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளார். இவரை கைது செய்ய வேண்டும். மேலும் அவர் தயாரிக்கும் ஆவண படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல கோரிக்கை மனு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story