வீட்டின் கதவை உடைத்து16 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து16 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு
x

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை- பணம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நாத்தம் ரைஸ்மில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 40). இவருடைய மனைவி மேனகா. கேசவன் ஓசூர் அருகே உள்ள தளி பகுதியில் பேக்கிரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை பண்டிகை கொண்டாட சொந்த ஊரான ரைஸ் மில் வட்டத்தில் உள்ள வீட்டை சுத்தம் செய்ய ஊருக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது. மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை

இது சம்பந்தமாக கேசவன் நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story