விபத்தில் ஓவியர் பலி
குடியாத்தம் அருகே விபத்தில் ஓவியர் பலியானார்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே விபத்தில் ஓவியர் பலியானார்.
குடியாத்தம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). பிரபல ஓவியரான இவர் நேற்று முன்தினம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார் சேத்துவண்டை கிராமம் அருகே தனியார் பள்ளி அருகே வந்தபோது பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் பலத்த காயமடைந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வம் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.
விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஓவியர் செல்வம் மீது மோதிய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அதனை தேடி வருகின்றனர்.