தலைக்கேறிய போதை.. தெளியாத மப்பு.. பயணிகளை அலறவிட்ட "குடி"மகள் - அல்லோலப்பட்ட பஸ் ஸ்டாண்ட்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும் என்பார்கள். ஆண், பெண் பேதமே இல்லாமல் யாரைப் பார்த்தாலும் குடிகாரர்களாக மாறி நிற்கிறார்கள். தெருவுக்குத் தெரு திறந்து கிடக்கும் மதுக் கடைகளால் மக்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ நன்றாக குடிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர். ஆண்களும், பெண்களும் சரி சமமாக குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது.
இந்தநிலையில், திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு ஏராளமான வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பஸ் நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் ஆண் ஒருவரை அடித்து வம்பிற்கு இழுத்ததோடு ஆபாசமாக பேசியது சுற்றித்திரிந்தது, பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. தற்போது அந்தப் பெண் போதை ஆசாமி செய்த அட்டூழிய செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
பஸ் நிலையத்தில் போதையில் தலைக்கேறி வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.