டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
கீழ்பென்னாத்தூர் அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 பவுன் நகை திருட்டு
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.புதூரில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (வயது 27). திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜீவா அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவலூர்பேட்டை சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சோ.புதூரில் உள்ள வீடு பூட்டி இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவில் வைத்திருந்த கம்மல், பிரேஸ்லெட், தங்க சங்கிலி உள்ளிட்ட 12 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் அறிந்த கார்த்திகேயன் உடனடியாக சோ.புதூருக்கு விரைந்து வந்தார்.
அப்போது நகைகள் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.