விபத்தில் டிரைவர் பலி


விபத்தில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 23 July 2023 1:00 AM IST (Updated: 23 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் டிரைவர் பலியானார்.

மதுரை

திருமங்கலம்

சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 63). இவர் வேனில் சிவகாசியில் இருந்து நிலக்கோட்டைக்கு லோடு இறக்கிவிட்டு மீண்டும் நிலக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு வந்து கொண்டிருந்தார். மேலக்கோட்டை அருகே வந்தபோது உணவு அருந்துவதற்காக வேனை சர்வீஸ் சாலையில் நிறுத்திவிட்டு எதிரே உள்ள உணவகத்திற்கு சென்றார். உணவருந்தி விட்டு மீண்டும் நான்கு வழிச்சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம், வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற வடமாநில தொழிலாளி காயமடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story