மகனை கத்தியால் குத்திய டிரைவர்
மகனை கத்தியால் குத்திய டிரைவர்
திருப்பத்தூர்
வேலூரை அடுத்த அன்பூண்டி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் குப்பன் (வயது 57), லாரி டிரைவர். இவருடைய இளைய மகன் மணிகண்டன் (36) விரிஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். தந்தைக்கும், மகனுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டிற்கு சென்று குப்பனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த குப்பன் திடீரென பேனா கத்தியால் மணிகண்டனை குத்தினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story