தாண்டிவிடலாம் என நினைத்த டிரைவர்... டிராக்டரோடு அடித்து சென்ற வெள்ளம்...
தேனி மாவட்டத்தில் கொட்டக்குடி ஆற்றை கடக்க முயன்ற டிராக்டர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தேனி,
தேனிமாவட்டம், போடியில் கொட்டக்குடி ஆற்றை கடக்க முயன்ற டிராக்டர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போடிக்கு மாங்காய் லோடு ஏற்றி சென்ற டிராக்டர் ஒன்று, கொட்டக்குடி ஆற்றை கடந்தபோது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. எதிர்பாராமல் வந்த வெள்ளத்தைக் கண்டு ஓட்டுநர் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்கிய புதிய டிராக்டர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story