மது போதையில் பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்


மது போதையில் பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்
x

ஜோலார்பேட்டை அருகே மது போதையில் பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

பர்கூர் பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று திருப்பத்தூருக்கு வந்தது. டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் சுப்பிரமணி ஆகியோர் பணியில் இருந்தனர். அச்சமங்கலம் பகுதியில் வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த 3 போதை ஆசாமிகள் பஸ்சை வழிமறித்து சிகரெட் பிடித்தபடி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றனர்.

பஸ் டிரைவர் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்த 3 பேரும் சின்ன மூக்கனூர் கூட்ரோட்டில் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். பஸ் டிரைவரும் பஸ்சை நிறுத்தினார். உடனே போதை ஆசாமி பஸ்சில் ஏறி டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ்சில் இருந்த பயணிகள் அவர்களை தடுத்து நிறுத்தி, தட்டிக்கேட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து 3 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story