மின்கம்பம் முறிந்து விழுந்தது
மின்கம்பம் முறிந்து விழுந்தது
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் உள்ள கோவிலடி கிராமத்தில் நேற்று மதியம் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது அந்த லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் உரசியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, திருக்காட்டுப்பள்ளி மின்சார வாரியத்தின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முறிந்து போன மின்கம்பத்தை அகற்றி, புதிதாக மின்கம்பம் நட்டு மின் இணைப்புக்களை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story