பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்றிய மின்வாரியத்தினர்
திருவெண்காடு அருகே நெப்பத்தூரில் பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்றிய மின்வாரியத்தினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
திருவெண்காடு அருகே நெப்பத்தூர் தீவு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது இந்த கிராமத்தில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ளது. இதனிடையே இந்த கிராமத்தில் உள்ள மின்மாற்றி திடீரென பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சீர்காழி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி தலைமையில் திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பழைய மின்மாற்றி அப்புறப்படுத்தி விட்டு, புதிய மின்மாற்றியை பொருத்தி மேற்கண்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்திட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து விரைந்து செயல்பட்டு மின் வினியோகம் செய்திட ஏற்பாடு செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.