பனை மரத்தை பிடுங்கி யானை அட்டகாசம்


பனை மரத்தை பிடுங்கி யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே பனை மரத்தை பிடுங்கி யானை அட்டகாசம் செய்தது.

தென்காசி

ஆழ்வார்குறிச்சி:

ஆழ்வார்குறிச்சி அருகே பங்களாகுடியிருப்பு பகுதியில் உள்ள சிமி என்பவரது தோட்டத்துக்கு பின்னால் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிந்தது. அந்த யானை அங்குள்ள பனை மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள், அந்த யானை ஊருக்குள் வந்து விடுமோ என்று பீதியில் உள்ளனர். மேலும் யானையை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story