சிறுமியை வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்ற நிதி நிறுவன ஊழியர்கள்


சிறுமியை வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்ற நிதி நிறுவன ஊழியர்கள்
x

சிறுமியை வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 28 வயது பெண் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். இவர் கடன் தவணையை கடந்த 2 மாதங்களாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லை. அவரது மகள் வீட்டில் இருந்தார். அப்போது அவர்கள் 5 பேரும் அந்த சிறுமியிடம் அவதூறாக பேசியதுடன், வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த 28 வயது பெண் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story