சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி


சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
x

கட்டுமானப்பணியின் ேபாது சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள ஒரு தனியார் ஆலையில் கட்டுமானப்பணி முடிந்து சார கம்பிகளை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில் அங்கு பணியில் இருந்த ஜார்கண்ட் மாநிலம் கருவா பகுதியை சேர்ந்த ஹரி ஓம் குமார் (வயது 21) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அங்கு பணியில் இருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்ஷியாம் (24) என்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய இரு வட மாநில தொழிலாளர்களும் கடந்த 4 வருடங்களாக அந்த ஆலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.


Related Tags :
Next Story