கலை, அறிவியல் கல்லூரிகளில் 27-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு 23-ந் தேதிக்கு மாற்றம்-பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல்


கலை, அறிவியல் கல்லூரிகளில் 27-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு 23-ந் தேதிக்கு மாற்றம்-பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல்
x

கலை, அறிவியல் கல்லூரிகளில் 27-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு 23-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்து உள்ளார்.

சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பருவத்தேர்வுகள் வருகிற 24-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 17-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே 27-ந் தேதி பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் நடைபெறுவதாக இருந்த எழுத்து தேர்வு முன்னதாக வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story