தூக்கு தண்டனை கைதி கட்டை ராஜாவை ஆஜர்படுத்த வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தூக்கு தண்டனை கைதி கட்டை ராஜாவை ஆஜர்படுத்த வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதி கட்டை ராஜாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா. இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 16 கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனையும், அவரது கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் விரைவு கோர்ட்டு சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான முடிவு எடுப்பதற்கு மதுரை ஐகோர்ட்டில் சம்பந்தப்பட்ட போலீசார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆறுமுகம், செல்வம் ஆகியோர் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டை ராஜா தரப்பு வக்கீல் ஆஜராகவில்லை. இதையடுத்து கட்டை ராஜா உள்பட 3 பேரையும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இன்று (30-ந்தேதி) ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story