மகன் இறந்த நாளில் விவசாயி தற்கொலை
கயத்தாறு அருகே, மகன் இறந்த நாளில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகன் கல்லறையில் விஷம்குடித்து இந்த சோக முடிவை எடுத்துள்ளார்
கயத்தாறு:
கயத்தாறு அருகே, மகன் இறந்த நாளில் விவசாயி விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார். மகன் கல்லறையில் விஷம்குடித்து இந்த சோக முடிவை எடுத்துள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த சபரிமுத்து மகன் சவரிராஜ் (வயது 47). விவசாயி. இவருடைய மகன் லாரன்ஸ் கடந்து ஆண்டு இறந்து விட்டார்.
நேற்று முன்தினம் தனது மகன் இறந்த நாள் அன்று அவருடைய கல்லறை ேதாட்டத்துக்கு தந்தை சவரிராஜ் சென்றார். அங்கு மகன் லாரன்ஸ் கல்லறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். பின்னர் அங்கேயே விஷம்குடித்து விட்டு வீட்டுக்கு வந்து படுத்து விட்டார்.
தற்கொலை
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலிப் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்துபோன சவரிராஜிக்கு நியூகிளாஸ்மேரி என்ற மனைவியும், அந்தோணிசெல்வம் என்ற மகனும், வெண்ணிலா என்ற மகளும் உள்ளனர்.
மகன் இறந்த நாளில் விவசாயி விஷம் குடித்து சோக முடிவை எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.