வாழைக்காய் விவசாயி மயங்கி விழுந்து சாவு


வாழைக்காய் விவசாயி மயங்கி விழுந்து சாவு
x

ஆலங்குளத்தில் வாழைக்காய் விவசாயி மயங்கி விழுந்து சாவு

தென்காசி

ஆலங்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 75). இவர் ஆலங்குளம் காய்கனி சந்தைக்கு தனது தோட்டத்தில் விளைந்த வாழைத்தார்களை வாகனம் ஒன்றில் வைத்து விற்பனைக்காக நேற்று கொண்டு வந்தார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த 2 பேர் வந்தனர்.

மதியம் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிடும்போது வெங்கடாசலபதி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார், வெங்கடாசலபதி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story