டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி தலை நசுங்கி சாவு


டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி தலை நசுங்கி சாவு
x
தினத்தந்தி 13 Feb 2023 12:37 AM IST (Updated: 13 Feb 2023 4:15 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே லிப்ட் கேட்டு வந்த விவசாயி டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

வல்லம்:

தஞ்சை அருகே லிப்ட் கேட்டு வந்த விவசாயி டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை அதினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது52). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தஞ்சைக்கு வந்துவிட்டு பின்னர் பஸ்சில் ஊர் திரும்பினார். தஞ்சை- மருங்குளம் சாலையில் வேங்கராயன்குடிக்காடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற சேகர், அந்த வழியாக நா.வல்லுண்டாம்பட்டு மேலத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் 'லிப்ட்' கேட்டு ஏறினார்.

டிராக்டருக்கும், டிப்பருக்கும் இடையிலான பகுதியில் நின்று கொண்டு பயணித்த சேகர் சிறிது தூரம் சென்றதும் திடீரென நிலை தடுமாறி டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

தலை நசுங்கி சாவு

அப்போது டிராக்டர் டிப்பரின் டயர் சேகரின் தலையில் ஏறி நசுக்கியது. இதில் தலை நசுங்கி, சேகர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வல்லம் போலீசார் டிராக்டரை ஓட்டி வந்த சுரேஷ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story