விபத்தில் காயம் அடைந்த விவசாயி சாவு
கடையநல்லூரில் விபத்தில் காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கண்மணிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 13-ந்தேதி கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் அருகே உள்ள கடையில் இட்லி வாங்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சவுந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் புன்னையாபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பலவேசமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story