விவசாயி சரமாரி வெட்டிக்கொலை


விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே, சொத்து தகராறில் விவசாயி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே, சொத்து தகராறில் விவசாயி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

விவசாயி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணிபேரி புதூரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 45), விவசாயி. இவருடைய மனைவி கலாவதி. இவருக்கு சொந்தமான இடம் தலைவன்கோட்டை கண்மாய்க்கு அருகே உள்ளது.

கலாவதிக்கு சொந்தமான சொத்தை தனக்கு எழுதி தரும்படி கலாவதியின் சித்தப்பா சின்னபாண்டி (48) தனது உறவினரான அய்யாத்துரையிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அய்யாத்துரைக்கும், சின்னபாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெட்டிக்கொலை

நேற்று காலை தலைவன்கோட்டை கண்மாய்க்கு அய்யாத்துரை சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னபாண்டி, சொத்தை எழுதித் தரச்சொல்லி மீண்டும் அய்யாத்துரையிடம் வலியுறுத்தி உள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சின்னபாண்டியும், அங்கு வந்த அவரது தம்பி அலங்காரபாண்டியும் (46) சேர்ந்து அய்யாத்துரையை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் அய்யாத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதையடுத்து அங்கிருந்தவர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அய்யாத்துரை உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து சின்னபாண்டியை கைது செய்தனர். அவரது தம்பி அலங்காரபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் விவசாயி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சின்ன மாமனார் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story