மரத்தில் ஏறி ஆட்டுக்கு தழை வெட்டிய விவசாயி கீழே விழுந்து சாவு
மரத்தில் ஏறி ஆட்டுக்கு தழை வெட்டிய விவசாயி கீழே விழுந்து இறந்தார்.
அரியலூர்
ஆண்டிமடம்:
ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 55). விவசாயியான இவர் பெரிய கருக்கை- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் ராமமூர்த்தி என்பவரது நிலத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி தனது ஆடுகளுக்கு தழை வெட்டியபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு விலா எலும்பில் பலத்த அடிபட்டதாக தெரிகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆண்டிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்ல முற்பட்ட நிலையில் அவர் இறந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story