கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விவசாயி பிணமாக மிதந்தார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மாயிராம்பட்டியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவரை திடீரென்று காணவில்லை. இந்நிலையில் அருகிலுள்ள விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றில் பொன்ராஜ் பிணமாக மிதந்துள்ளார்.. இதுகுறித்து அவரது மனைவி பொன் பாண்டியம்மாள் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story