விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

திருவாரூர்

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறி வருகிறது. இதனை விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது உறுதி என தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரின் உருவப்பொம்மை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் ெரயில் நிலையம் அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் ராமமூர்த்தி, அழகிரிராஜ், வேலாயுதம், பாலகுமாரன், அர்ஜுனன், அழகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்ட குழுவினர் உருவப்பொம்மையை எரித்த போது அதனை போலீசார் தடுத்துநிறுத்தினர்.


Next Story