மூங்கில்துறைப்பட்டு அருகேஏரி நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரிய விவசாயிகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே ஏரி நீர்வரத்து வாய்க்காலை விவசாயிகள் தூா்வாாினா்.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்துக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வலதுபுறபிரதான கால்வாய் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு வந்தடைந்தது. இவ்வாறு வந்த தண்ணீர், கிளை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு செல்கிறது.
அந்த வகையில் பொரசப்பட்டு ஏரிக்கு செல்லும் கிளை கால்வாய் முழுவதும் தூர்ந்த நிலையிலும், செடி, கொடிகள் மரங்கள் விழுந்தும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள கிளை கால்வாயை தூர் வாரும் பணியை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story