இறந்த முதியவர் உடலை வயல் வழியாக கொண்டு செல்லும் அவலம்


இறந்த முதியவர் உடலை வயல் வழியாக கொண்டு செல்லும் அவலம்
x

இறந்த முதியவர் உடலை வயல் வழியாக கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை

திருவரங்குளம்:

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு தோப்புப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்கள் மயானக்கரைக்கு சென்று வருவதற்கு சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று வந்தனர். இந்நிலையில், நேற்று இறந்த முதியவர் உடலை தனியாருக்கு சொந்தமான விவசாய வயல் வழியாக எடுத்து சென்றனர். நீண்ட காலமாக மயான கரைக்கு செல்ல சாலை இல்லாமல் அவதிப்படும் இப்பகுதி மக்களுக்கு மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story