பெண் கொலைக்கு உடந்தையாக இருந்த தந்தை கைது


பெண் கொலைக்கு உடந்தையாக இருந்த தந்தை கைது
x

பெண் கொலைக்கு உடந்தையாக இருந்த தந்தை கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). மலேசியாவில் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா(35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் ஹானஸ்ட்ராஜ்(26) என்பவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதற்கிடையில் ஹானஸ்ட் ராஜிக்கும், சத்யாவுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஹானஸ்ட்ராஜ், சத்யாவை வெட்டி கொலை செய்தார். இதையடுத்து ஹானஸ்ட்ராஜ் தா.பழூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை தேவேந்திரனும்(57) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story