திருநாட்கதிர் கொண்டுவரும் விழா
தென்காசி கோவிலுக்கு திருநாட்கதிர் கொண்டுவரும் விழா நடந்தது.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் தென்காசி அருகே நன்னகரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நெல் வயலில் இருந்து தென்காசி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரு நாட்கதிர் எடுத்து வரும் விழா நேற்று நடைபெற்றது.
வயலில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை பொதுமக்கள் நன்னகரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து அங்கிருந்து மேளதாளம் முழங்க குற்றாலம் - தென்காசி மெயின் ரோட்டில் உள்ள திருநாட்கதிர் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்த பின்னர் ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
கோவில் நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் நெற்கதிர்கள் திருநாட்கதிர் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் டாக்டர் கே.பி.சங்கரகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.