ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் சினிமா நடிகர் புகார்


ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் சினிமா நடிகர் புகார்
x

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் சினிமா நடிகர் புகார் மனு அளித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியை சேர்ந்தவர் ஹலோ கந்தசாமி. சினிமா நடிகர். இவரின் மனைவி சந்தானலட்சுமி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கந்தசாமி புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பெருநாழியில் 2009-ம் ஆண்டு முதல் 16 பேருடன் சேர்ந்து மகளிர் மன்றம் தொடங்கி நடத்தி வந்தோம். இந்த நிலையில் மகளிர் மன்ற வட்டார பொறுப்பில் இருந்த கமுதி வலையபூக்குளத்தை சேர்ந்த பெண் அலுவலர் ஒருவர் எங்களுக்கு ரூ.3 லட்சம் வங்கி கடன் பெற்று தந்தார். அந்த கடன் தொகையை நாங்கள் முழுமையாக செலுத்தி விட்ட நிலையில், வங்கியில் இருந்து வாங்கிய கடன் தொகை மொத்தம் ரூ.4 லட்சம் என்றும், மேலும் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.


Related Tags :
Next Story