மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி


மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி
x

மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாஜி (வயது 30), மீனவர். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மேல்மாடிக்கு சாஜி சென்றார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சாஜி இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story