சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் வசந்தி, பார்வதி, இணைச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின் படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். காலை உணவை சத்துணவு மையத்திலேயே தயாரித்து வழங்க வேண்டும். சமையலுக்கான கியாஸ் சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story