அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ- தீயணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்


அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் 3-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ- தீயணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ 3-வது நாளாக எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ 3-வது நாளாக எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

3-வது நாளாக பற்றி எரிகிறது

கோைவமாவட்டம் அக்காமலை, புல்மேடு வனப் பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேசிய பூங்காவாக விளங்குகிறது. வனத்துறையினரை தவிர வேறு யாரும் இந்த வனப் பகுதிக்குள் செல்லமுடியாது. இந்த அக்காமலை புல்மேடு வனப் பகுதியை கேரள மற்றும் தமிழ் நாடு வனத்துறையினரும் பராமரித்து வருகின்றனர்.

ஆண்டு தோறும் கோடைக்காலத்தில் மே மாதத்தில் காட்டுத்தீ பிடிப்பது வழக்கம். வனத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருவதால் காட்டுத்தீ பிடித்து பற்றி எரிந்து வருகிறது. நேற்று முன்தினம் உடுமலை, கேரள வனச்சரக பகுதியை ஒட்டிய புல்மேடு வனப் பகுதியில் காட்டுத்தீ பிடித்துள்ளது. இரவு பகலாக எரிந்த காட்டுத்தீ தற்போது வால்பாறை வனச்சரக பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள புல்மேடு வனப் பகுதியில் பிடித்து 3-வது நாளாக எரிந்து வருகிறது.

வெள்ளிமுடி வனப்பகுதிக்கு பரவல்

வால்பாறை வனச்சரக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அக்காமலை புல்மேடு பகுதிக்கு சென்று காட்டுத்தீ வால்பாறை வனச்சரக பகுதிக்குள் பரவாமல் தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கடுமையான வெயில் காரணமாகவும் பலத்த காற்று வீசிக் கொண்டிருப்பதாலும் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் பார்கவாதேஜா தலைமையில் வனத்துறையினர் இரவு பகலாக காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த காட்டுத்தீ தற்போது அக்காமலை புல்மேடு பகுதியின் மற்றொரு மலைப் பகுதியாக உள்ள காடம்பாறை வெள்ளிமுடி பகுதியை நோக்கி எரிந்து வருகிறது. எந்த ஒரு வாகனமோ தீயை அணைக்கும் கருவிகளையோ கொண்டு செல்ல முடியாத நிலையில் மிகவும் உயரமான மலைப் பகுதியில் தீ பிடித்து எரிந்து வருகிறது.

அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ 3-வது நாளாக எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த புல்மேடு பகுதியில் உள்ள காய்ந்த நிலையில் இருக்கும் மரம், செடி, கொடிகள் எல்லாம் எரிந்து முடியும் வரை காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவது வனத் துறையினருக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகில் உள்ள ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தனியார் காட்டில் காட்டுத்தீ பிடித்து எரிந்து வருகிறது. எஸ்டேட் நிர்வாகத்தினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story