வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
கடையநல்லூர் பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை புனரமைப்பு செய்யும் பணி, 25-வது வார்டு அட்டக்குளம்தெரு பெண்கள் தொழுகை பள்ளி அருகில் உள்ள ஊருணியை தூர்வாரி பராமரிக்கும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் குளத்தை சுற்றி நடை பயிற்சிக்காக நடைபாதை வசதி அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகரமன்ற தலைவர் ஹபிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் இளநிலை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, தி.மு.க. வார்டு செயலாளர் காஜா முகையதீன், பிரதிநிதி அகமது அலி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மூவண்ண மசூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.