புதுமண தம்பதிக்கு மண்சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்


புதுமண தம்பதிக்கு மண்சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுமண தம்பதிக்கு மண்சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள புங்கறை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). பட்டதாரியான இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண்ணான பிரியா (24) என்பவரை பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார். கல்லூரி முடிந்து விக்னேசுக்கு வேலை கிடைத்த பிறகு காதலித்த பெண்ணின் வீட்டில் தனது பெற்றோர்கள் மூலம் பெண் கேட்டுள்ளார். முதலில் தயங்கிய பெண்வீட்டார் பிறகு சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து காதலர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. திருமணத்தை பெற்றோர்கள் நடத்தியிருந்தாலும் திருமண நிகழ்வை நண்பர்கள் அமர்களப்படுத்தி உள்ளனர். அதன்படி மணமக்களை செண்டை மேளத்துடன் நடனமாடியபடி அழைத்து வந்த நண்பர்கள் சற்று வித்தியாசமாக மணமக்களுக்கு மண்சட்டியில் விருந்து கொடுத்தனர். ஒரு மண்சட்டியில் இருந்த உணவை இருவரும் எடுத்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டனர். இதைகண்ட அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுபோல் வாழ்க்கையிலும் இருவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என வாழ்த்தி சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story