மதுபாரை அடித்து நொறுக்கிய கும்பல்


மதுபாரை அடித்து நொறுக்கிய கும்பல்
x

நிலக்கோட்டை அருகே மதுபாரை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையின் பின்புறத்தில் பார் செயல்பட்டு வருகிறது. நேற்று கருத்தாண்டிபட்டியை சேர்ந்த வெள்ளை, சதீஷ்குமார், பால்பாண்டி, முத்துக்குமார் மற்றும் சிலர் பாருக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.


இதனைக்கண்ட பார் ஊழியர்கள் சின்னப்பாண்டி, தவக்குமார் ஆகியோர் அவர்களிடம் பாரில் தகராறு செய்ய வேண்டாம் என்றும், வெளியே போங்கள் என்றும் கூறினர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், சின்னபாண்டி மற்றும் தவக்குமாரை சரமாரியாக தாக்கினர்.


இதுமட்டுமின்றி பாரில் இருந்த டி.வி., டியூப்லைட் ஆகியவற்றை அடித்து நொறுக்கி உணவுப்பொருட்களை சூறையாடினர். இதனையடுத்து அங்கிருந்த சிலர் திரண்டு வந்து சத்தம்போடவே அவர்கள் சென்று விட்டனர். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் பார் உரிமையாளர் பெரியசாமி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தாவூத் உசேன் வழக்குப்பதிவு செய்து வெள்ளை, சதீஷ்குமார், பால்பாண்டி, முத்துக்குமார் மற்றும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story