ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கலெக்டரிடம் சிறுமி மனு


ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கலெக்டரிடம் சிறுமி மனு
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே 3 பேர் குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கலெக்டரிடம் சிறுமி மனு அளித்தார்.

நாகப்பட்டினம்


நாகை அருகே 3 பேர் குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கலெக்டரிடம் சிறுமி மனு அளித்தார்.

தூர்வாரும் பணி

நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் தேவநதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கிஸ் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார்.

அப்போது பெருங்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த ப்ரீத்தி (வயது 10) என்ற சிறுமி கலெக்டருக்கு சால்வை அணிவித்து, தான் கொண்டு வந்த மனுவை கொடுத்தார். பின்னர் அந்த சிறுமி கலெக்டரிடம் கூறியதாவது:-

கலெக்டரிடம் சிறுமி கோரிக்கை

எங்கள் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிலர், 3 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அய்யா என்று மழலை குரலில் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

பின்னர் மாணவியிடம் எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்க, எத்தனையாவது படிக்கிறீங்க என்று கனிவோடு விசாரித்தார். 5-ம் வகுப்பு மாணவி தங்கள் கிராம பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டது அங்கிருந்த அனைவரையும் நெகிழச்செய்தது.


Next Story