பெண் தவறி விழுந்து பலி


பெண் தவறி விழுந்து பலி
x

தெருக்குழாயில் குடிநீர் பிடித்து வந்தபோது பெண் தவறி விழுந்து இறந்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கடற்கரைவேல் (வயது 52). நாங்குநேரி நெடுஞ்சாலை துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தற்போது மூலைக்கரைப்பட்டி ரஹ்மத் நகரில் வசித்து வருகிறார். கடற்கரைவேல் மனைவி மகாலட்சுமி (50). சம்பவத்தன்று வீட்டு அருகே உள்ள தெருக்குழாயில் குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் வரும்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் காயமடைந்த மகாலட்சுமியை உறவினர்கள் மீட்டு மூலைக்கரைப்பட்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story